கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக தன்னால் எந்தவொரு குழுவும் நியமிக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவிக்கின்றார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் இறுதிக்; கிரியைகள் தொடர்பில் ஒரு புத்திஜீவிகள் குழு மாத்திரமே விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞான ரீதியிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, சுகாதார பிரிவினர் தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post