இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் இறுதியாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில், முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முல்லேரியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், கடந்த 10ம் திகதி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இரத்த அழுத்தம், நியூமோனியாவுடனான கொவிட் தொற்றே இந்த உயிரிழப்புக்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,375 ஆக அதிகரித்துள்ளதுடன், 8398 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
22831 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)