இலங்கையில் கொவிட் தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமான நாள் முதல் இன்று வரையான காலம் வரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000 எட்டியுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 402 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றின் 2வது அலையினால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 10,140 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன், அந்த மாவட்டத்தில் 6502 கொவிட் தொற்றாளர்கள் 2ஆவது அலையினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 1073 பேரும், கண்டி மாவட்டத்தில் 512 பேரும் இரண்டாவது அலையினால் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, மினுவங்கொட மற்றும் பேலியகொட ஆகிய கொவிட் கொத்தணிகளினால் 21,857 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 14,896 பேர் குணமடைந்துள்ளனர்.
மினுவங்கொட கொத்தணியினால் 3059 பேரும், பேலியகொட கொத்தணியினால் 18,798 பேரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், இலங்கையில் கொவிட் தொற்றினால் இதுவரை 25,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (TrueCeylon)