இரண்டாம் இணைப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பு − செட்டியார் தெரு வர்த்தகர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலையகத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவரும் பின்னணியிலேயே, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செட்டியார் தெருவிலுள்ள வர்த்தக நிலையங்கயை மூடி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு − ஐஞ்சுலாம்பு சந்தியில் தற்போது பதாகைகளை ஏந்தி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில் முன்னெடுக்கப்படும் முழு கடையடைப்பு (பூரண ஹர்த்தால்) போராட்டத்திற்கு கொழும்பு வாழ் தமிழர்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு − செட்டியார் தெருவிலுள்ள தங்காபரண வர்த்தக நிலையங்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒரு மணி நேரத்தில் ஐஞ்சுலாம்பு சந்தியில் அமைதியான முறையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மலையக மக்களின் நாளாந்த அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி, ஐஞ்சுலாம்பு சந்தியில் நடத்தப்படும் போராட்டத்தில், அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது (TrueCeylon)
Discussion about this post