கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 30000 கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என கொழும்பு மாநகர சபையின் சுகாதார பரிசோதகர் ருவன் விஜேமுனி தெரிவிக்கின்றார்.
கொழும்பு நகரில் 600000 வரையான மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு நகரில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் 5 வீதமானவை கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த அனைவருக்கும் வைரஸ் உடலில் இருக்கக்கூடும் என்பதுடன், அவர்களினால் வைரஸ் பரப்பப்படுகின்றது என கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த பிரச்சினையை அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என கொழும்பு மாநகர சபையின் சுகாதார பரிசோதகர் ருவன் விஜேமுனி தெரிவிக்கின்றார்.