இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொவிட் தொற்றினால் இறுதியாக ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
நான்கு ஆண்களும், பெண்ணொருவரும் இறுதியாக உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
குறித்த பெண் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், நான்கு ஆண்களும் கொழும்பு 02, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.