இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக 4 உயிரிழப்புக்கள் பதிவான நிலையிலேயே, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு – 15, கொழும்பு – 12, பொரள்ளை மற்றும் கொழும்பு – 10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70, 53, 84 மற்றும் 75 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூவருக்கு கொவிட் தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 20,000தை எட்டியது.
இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 20,162 பேரில் 14,069 பேர் குணமடைந்துள்ளனர்.
6010 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.