கொழும்பு நகரில் மேலும் பல பகுதிகள் நாளை மறுதினம் அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனிவீதி மற்றும் டாம் வீதி ஆகிய பகுதிகள் நாளை மறுதினம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, நாளை மறுதினம் அதிகாலை 5 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.
இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையானது, மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை, தொடர்ந்தும் அவ்வாறே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் களனி, ஜாஎல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட மற்றும் கடவத்த ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர, கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய பகுதிகளின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாளை அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்படுகின்றன.