கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 241 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதியாக மட்டக்குளி நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
மட்டக்குளி பகுதியில் 51 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்குளிக்கு அடுத்தப்படியாக கிரான்பாஸ் பகுதியில் 27 தொற்றாளர்களும், மருதானை பகுதியில் 22 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புளுமென்டல் பகுதியில் 10 தொற்றாளர்களும், தெமட்டகொட பகுதியில் 9 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 210 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகள் அச்சுறுத்தலான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பகுதியில் நேற்றைய தினம் 40 தொற்றாளர்களும், கம்பஹா பகுதியில் 32 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post