தொலைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் கட்டண மீள்நிரப்பு அட்டைகளின் (Mobile Recharge Cards) பெறுமதியை விடவும், அதிக விலைகளில் குறித்த மீள்நிரப்பு அட்டைகள் விற்பனை செய்து வருவதாக ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு அறிய கிடைத்தது.
குறிப்பாக கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.
மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, ஆமர்வீதி, முகத்துவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகின்றது
100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற தொலைபேசி மீள்நிரப்பு அட்டை 100 ரூபா முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படும் அதேவேளை, 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தொலைபேசி மீள்நிரபு அட்டை 55 முதவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.