கொழும்பு மாநகர எல்லைக்குள் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவிக்கின்றார்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடனேயே, அவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தி வைப்பதே, இந்த வீழ்ச்சிக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குள் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்று என்ற அளவிற்கு குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரான காலத்தில் நாளாந்தம் 350 முதல் 360 வரையான தொற்றாளர் அடையாளம் காணப்படுகின்ற போதிலும், தற்போது 90 முதல் 110 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக பி.சி.ஆர் மற்றும் அன்டீஜன் பரிசோதனைகளை அதிகரித்தமையே இதற்கான காரணம் என அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில், கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவிக்கின்றார். (TrueCeylon)