கொரோனா புதிய வீரியம் கொண்ட வைரஸ் தாக்கத்திற்குள்ளான இருவர் கொழும்பு மாவட்டத்திற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவிக்கின்றார்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் கொவிட் 3வது அலையை தவிர்த்துக் கொள்ள முடியும் என அவர் வேண்டுக்கோள் விடுக்கின்றார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், 3வது அலையின் தாக்கத்தை தவிர்த்துக்கொள்ள முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“கொழும்பு மாநகர எல்லைக்குள் கொவிட் வீரியம் கொண்ட வைரஸ் தாக்கத்திற்குள்ளான இருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 2வது அலையை வெற்றிகரமாக நாம் எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளோம். எனினும், சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றாது, பொதுமக்கள் செயற்படுவார்களேயானால், நாட்டில் 3வது அலை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்வது சிரமமானதாகும்.” என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post