கொழும்பில் சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொம்பனிவீதி எல்லைக்குட்பட்ட வாகந்த மற்றும் ஹ{னுபிட்டிய, ஆகிய பகுதிகளும், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் மயூரா பிளேஷ் ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன.
மேலும், பொரள்ளை பகுதியின் ஹல்கஹவத்தை மற்றும் காலிபுல்ல ஆகிய பகுதிகளின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளது.
வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள லக்சந்த செவன வீடமைப்பு திட்டத்தின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (28) அதிகாலை 5 மணி முதல் குறித்த பகுதிகளின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.(TrueCeylon)