கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, மட்டக்குளி பகுதியில் 388 கொவிட் தொற்றாளர்களும், முகத்துவாரம் பகுதியில் 327 கொவிட் தொற்றாளர்களும் தெமட்டகொட பகுதியில் 288 கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.