கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடலில் பணியில் இருந்த வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை ஆகியன இன்று இடம்பெறவுள்ளன.