ஹங்வெல்ல – கொடிகந்த விஹாரையின் தேரர் ஒருவரின் சடலம் கொடதெனியாவ – நாவான பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விஹாரையின் மற்றுமொரு தேரரினால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
65 வயதான உடுவில தம்மசிறி தேரர் கடந்த 2ம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
தேரரை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனொன்றையும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
தேரர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் தீ வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post