கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா கொழும்பு வர்த்தமானியில் தெரிவித்துள்ளார் .பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பத்து நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
டிசம்பர் 23 ஆம் திகதி வரை கண்காணிக்கப்பட்டு புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.