சீனாவிலுள்ள ஆய்வு கூடமொன்றிலிருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக, கொரோனா வைரஸ் வெளியேறியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக கொரோனா வைரஸின் ஆரம்ப பரவல் தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதற்காக சீனாவிற்கு சென்றுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் பென் இதனைக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹ{வான் நகரிலுள்ள ஆய்வுக்கூடத்திலிருந்து இந்த வைரஸ் வெளியேறியதாக கூறப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் மூலத்தை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன கூட்டாக இணைந்து நடத்திய ஆய்வுகளின் இறுதியில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஹ{வான் மாகாணத்திலேயே, கொரோனா வைரஸ் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை 106 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2.3 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், கொரோனா வைரஸின் மூலத்தை அடையாளம் கண்டுக்கொள்வதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post