காலியில் உள்ள பிரதான தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. டிசம்பர் 9 ஆம் தேதி அங்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி, மூன்று நபர்கள் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, தபால் நிலையத்தில் ஒரு ஓட்டுநர் உட்பட மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் கண்ட பின்னர், தபால் நிலையத்தை தற்காலிகமாக (11) மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.