எதிர்காலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இராணுவ தளபதிசவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விருப்பமில்லாதவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பியவர்களுக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகளையும் கருத்தில் கொண்டு , தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பும் கொரோனா தொற்றாளர்களை ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
அதன்படி, இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகள் தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருந்தால், அவர்கள் எந்த அரசு மருத்துவமனைகளுக்கும் மாற்றப்படலாம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரத்திற்குள் எடுக்கப்பட உள்ளதாக
இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.(Trueceylon)