இலங்கையில் இன்றைய தினம் 8 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இன்றிரவு வரையான தரவுகளின் பிரகாரம், 159 பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது,
131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 24 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
நால்வர் உயிரிழந்துள்ளமையை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 250 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.