கொழும்பு மோதரை பகுதியயை சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்துவந்த குறித்த நபர், ஹோமாகமை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொவிட் நியுமோனியா காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.