உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74,816ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 1,348,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 284,802 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவே அதிகளவிலான பாதிப்பை தற்போது எதிர்நோக்கியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் இதுவரை வெளியான தரவுகளின் பிரகாரம் 10,981 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழ்ந்துள்ளனர்.
367,758 பேர் கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவின் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 19,788 பேர் மாத்திரமே குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இல்லாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,523 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஸ்பெயினில் 13,341 பேர் உயிரிழந்துள்ளனர்.