கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தயாரிக்கப்பட்ட மருந்து 95 வீதம் வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பெல்ஜியத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றும் கொவிட் தொற்று ஒழிப்புக்கான மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.