கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் சம்பந்தமான அனைவருக்கு ஒரே சட்டத்தை கையாள வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி இன்று எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குமார் உட்பட பலர் இந்த பேரணியில் கலந்துக்கொண்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்கள் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு நாடு ஒரு சட்டம் என்பது சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய இடமளிக்காது, அவற்றை தகனம் செய்ய வேண்டும் எனவும் பௌத்த பிக்குமார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பேரணியில் பெங்கமுவே நாலக தேரர் உட்பட 150க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.(Trueceylon)