கெரவலபிட்டி குப்பை மேட்டில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கெரவலபிட்டி குப்பை மேட்டில் இன்று பிற்பகல் தீ பரவியுள்ளது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த இடத்திலேயே தீ பரவியுள்ளதாக அறிய முடிகின்றது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டின் பொருட்கள் காரணமாக, தீ வேகமாக பரவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றை பயன்படுத்தி, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)
Discussion about this post