தென்னிந்திய பிரபல நடிகையும், பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினருமான குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி ஆகியோர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடலூரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தமது கார் மீது, பார ஊர்தியொன்று மோதுண்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
விபத்தினால் தமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.