குறைந்த வருமானத்தை பெறுவோர் மற்றும் மத்திய தர வருமானத்தை பெறுவோருக்கான வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 7500 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்;த்தையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதம் நிறைவடைவதற்கு முன்னர், இந்த திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,
புதிதாக நிர்மாணிக்கப்படும் 7500 வீடமைப்பு திட்டத்தில், 4000 வீடுகள் குறைந்த வருமானத்தை பெறுவோருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய தரத்திலுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்கும் போது, குறைந்த அளவிலான ஆரம்ப கொடுப்பனவொன்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய தரத்திலுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்கும் நடைமுறையில் 30 வருடங்கள் வரை 6.25 வீதமான குறைந்த வட்டியில் வீட்டு கடனை வழங்கி வீடுகளை கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)