ஒரு தடவை அல்லது குறுகிய காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி முதல் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட சில மேலும் பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post