முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுரம் யுகத்திற்கு சொந்தமாவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் போதே இந்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிதைவுகள், பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியதாக நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். (TrueCeylon)
Discussion about this post