முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது, சிவலிங்கத்தை ஒத்த உருவத்தை கொண்ட சிதைவுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சிதைவுகள் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.#KurunthurMalai pic.twitter.com/fvEu8on6sL
— Shritharan Sivagnanam (@ImShritharan) February 10, 2021
இந்த தூபி ஒரு வகை கல் ஒன்றினால் செதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் உயரம் சுமார் 6.70 மீற்றர் என கூறப்படுகின்றது.
குறித்த கல்லின் மேற்பரப்பு 3 மீற்றர் வரை வரை வெளியில் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கல்லின் ஒரு பகுதி, நிலத்திற்குள் காணப்படுகின்றமையினால், அதன் சரியான உயரத்தை கணிப்பிட முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேபோன்று, இரண்டு அடி உயரமான மற்றுமொரு கல்லொன்றும் காணப்படுவதாகவும், அது நிலத்திற்கு கீழ் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். (TrueCeylon)
Discussion about this post