குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான பாடத்திட்ட பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
2015 – 2016 அல்லது 2017 ஆண்டுகளில் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
உயர்தரத்தில் எந்த பிரிவில் கல்வியை தொடர்ந்திருந்தாலும், குறித்த பாடத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. (TrueCeylon)
மேலதிக தகவல்களுக்கு :- www.health.gov.lk
Discussion about this post