இலங்கை : யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள புத்த விஹாரை அடையாளம் தெரியாத சிலரினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் இந்;து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் காணப்படுகின்ற நிலையில், புத்த விஹாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த விஹாரை பல லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post