ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல், நேற்று முன்தினம் (20) இரவு திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.
இந்த நிலையில், சந்திரமதியின் பூதவுடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக, சந்திரமதிக்கு கொவிட் தொற்று கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில், சந்திரமதி குழந்தைவேலின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்க உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்பின்னர், அன்னாரது பூதவுடல், அவரின் சொந்த ஊருக்கு கொண்டு சென்று, இறுதி கிரியைகளை செய்ய தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.