கார்த்திகை தீபம் ஏற்றியமைக்கான கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவன் தர்ஷிகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தவறான புரிதலின் கீழ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தெரிவிக்கின்றார்.
கார்த்திகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முற்றலில் தீபம் ஏற்றிய மாணவனை, கோப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தெளிவூட்டல்களை வழங்கி, குறித்த மாணவனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அங்கஜன் ராமநாதன் கூறியுள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிக்க தடை விதிக்கப்பட்ட பின்னணியில், தவறான புரிதலின் கீழ் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.