காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மோசடி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, இளைஞர், யுவதிகளின் கையடக்கத் தொலைபேசிகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் இன்று குறுந்தகவல் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் கூறுகின்றார்.
தங்களுக்கு பரிசொன்று கிடைத்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள பணத்தொகையொன்றை வங்கியில் வைப்பிலிடுமாறும் கோரி, இந்த குறுந்தகவல் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு இல்லையென்றால், வெளிநாட்டு சுற்றுலாவிற்கான சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளதாகவும், அந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கு பணத் தொகையொன்றை வங்கியில் வைப்பிலிடுமாறும் கோரி, குறுந்தகவல் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகளுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களுக்கோ குறுந்தகவல் கிடைக்கும் பட்சத்தில், அந்த குறுந்தகவலில் கூறப்பட்ட விதத்தை செயற்படுவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு இணையத்தளத்தின் ஊடாக மோசடி செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post