கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், அவருக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அவரது குடும்பத்தார் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருந்ததுடன், அவர்களில் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கல்வி அமைச்சர் அவருடன் நெருங்கி பழகியிருந்தார்.
இந்த நிலையிலேயே கல்வி அமைச்சருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது. (TrueCeylon)
Discussion about this post