மேல் மாகாணத்திலுள்ள வீடுகளின் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் போது, பொலித்தீன் மற்றும் உணவு வகைகளை வெவ்வேறாக பிரித்து, அவற்றை கழிவுப் பொருள் சேகரிப்;போருக்கு வழங்குமாறு மேல் மாகாண கழிவுப் பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நலின் மானப்பெரும தெரிவிக்கின்றார்.
அவ்வாறு கழிவுப் பொருட்களை பிரித்து வழங்க முடியவில்லை என்றால், வீடுகளிலேயே கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான முறையாக திட்டமொன்றை அமுல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை, 100 வீதம் பிரித்து வழங்க முடியவில்லை என்றால், அந்த கழிவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கழிவுப் பொருட்களை சேகரிப்போருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post