கேகாலை – கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சுகயீனமுற்று உயிரிழந்த ஒருவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக கடந்த 18ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்றைய தினமே வெளியாகியிருந்ததுடன், குறித்த நபர் நேற்று நண்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கன்னத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரவனெல்ல வைத்தியசாலை பிரிவில் பதிவான முதலாவது கொவிட் மரணம் இதுவென வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரின் உடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. (TrueCeylon)