கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வார காலத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதிமுதல் இன்று வரை கண்டி நகர் எல்லைக்குள் உள்ள 45 பாடசாலைகளை மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கண்டியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.(TrueCeylon)