கண்டி – தலதா மாளிகைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (16) மாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தந்தையும், மகனுமே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
இருவரும் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post