இலங்கை : கண்டி – புவெலிகட பகுதியிலிருந்;த 5 மாடி வீடொன்று உடைந்து வீழ்ந்தமையானது, இயற்கையாக ஏற்பட்ட அனர்த்தம் கிடையாது என அந்த கட்டிடம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணியில் ஏற்பட்ட குறைப்பாடே, இந்த கட்டிடம் இடிந்து வீழ்வதற்கான காரணம் என அந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் அடங்கிய 24 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கை, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பஸ்நாயக்க நிலமேயான அநுர லெவ்கெட்டவிற்கு சொந்தமான இந்த வீடு கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி இடிந்து வீழ்ந்தது.
இந்த சம்பவத்தின் போது, குறித்த வீட்டிற்கு கீழுள்ள மற்றுமொரு வீட்டில் வசித்த தந்தை, தாய் மற்றும் 50 நாட்கள் நிரம்பிய சிசு ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த கட்டிடத்தை நிர்மாணித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (TrueCeylon)
Discussion about this post