கண்டி நகர் எல்லைக்குட்பட்ட மூன்று பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய மாகாண அளுநர் லலித் யூ கமகே இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, 42 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கண்டி புனித திருத்துவ கல்லூரி, கலைமகள் வித்தியாலயம் மற்றும் தக்ஷி்லா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளும் திறக்கப்படாது என அவர் கூறினார்.
திறக்கப்படும் 42 பாடசாலைகளின் தரம் 6 முதல் தரம் 13 வரையான வகுப்புகளுக்கே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(TrueCeylon)