கண்டி – வத்தேகம பகுதியில் கடந்த புதன்கிழமை (23) பெண்ணொருவர் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தேகம பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்தேகம – பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சித்த பெண்ணையே, சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, குறித்த பெண்ணை சந்தேகநபர், கோடரியால் தாக்கி, கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தனது மனைவி காணாமல் போனமை தொடர்பில் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)