கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று காலை வத்துபிடிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சிலாபம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த வயது (47) பெண் பணியாளரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் , குறித்த பணியாளருக்கு போக்குவரத்து வசதி வழங்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் பணிபுரிந்த மற்றொரு பத்து ஊழியர்கள், பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.(True Ceylon)