மன்னார், காலி ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் கடல் அலை அதிக சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் கடல் அலையின் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை மேலெழும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கின்றமையினால், கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வரும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.(TrueCeylon)
இன்று (16) காலை 09.00 மணி முதல் நாளை (17) காலை 09.00 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post