கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்திய ஒருவர் மீது பாரிய தாக்குதல் நடத்தியுள்ளனர்.கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும்
விற்பனையை கட்டுப்படுத்திய ஒருவர் மீது பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர் .
7ம் திகதி ஒன்பது மணியளவில் கட்சன் வீதியில் வைத்து குறித்த
இளைஞன் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களது கிராமத்தில் இடம்பெற்று வந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை
உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கிராம இளைஞர்கள் ஒன்று
சேர்ந்து பொலீஸாரின் உதவியுடன் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.
இளைஞர்களின் நடவடிக்கை காரணமாக பல கசிப்பு உற்த்தியாளர்கள் மற்றும்
விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்தோடு கசிப்பு உற்த்தி
செய்யும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு ஒழிக்கப்பட்டது.
குறித்த நபர்கள் மீது கோபம் கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்ற குழுவினர், இந்த இளைஞர்கள் தனித்தனியாக செல்கின்ற போது, அவர்கள் மீது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.