இலங்கை : ETI மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி சலவை சட்டத்தின் கீழ், சட்ட மாஅதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம், குறித்த நால்வரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ETI நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஜீவக எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post