அரச பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும், உள்விவகார இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) முற்பகல் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இதுவரை காணப்பட்ட அரச பாதுகாப்பு, உள்விவகார மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
அரச பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் உள்விவகார இராஜாங்க அமைச்சு என இரண்டு இராஜாங்க அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு, அந்த அமைச்சு பொறுப்புக்கள் சமல் ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ளன. (TrueCeylon)
Discussion about this post