ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசேனேகா கொவிட் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துவதற்கு தென் ஆபிரிக்கா தீர்மானித்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் பரவும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸை, இந்த தடுப்பூசியினால் தடுக்க முடியாதுள்ளதை கண்டறிந்த நிலையிலேயே, அந்த நாட்டு சுகாதார பிரிவினர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
தென் ஆபிரிக்காவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 90%மானோருக்கு, புதிய வீரியம் கொண்ட வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு மற்றும் மத்திய நிலையிலுள்ள கொவிட் தொற்றாளர்களுக்கே, இந்த மருந்து சரியான பெறுபேறுகளை வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கொவிட் நோய் பரவுதல் மற்றும் கொவிட் வைரஸினால் ஏற்படும் உயிரிப்புக்களை குறைப்பதற்கு மாத்திரம், இந்த மருந்தினால் முடியும் என கூறப்படுகின்றது.
தென் ஆபிரிக்கா ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசேனேகா ஒரு மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ள பின்னணியிலேயே, இந்த மருந்துக்கான பயன்பாட்டை நிறுத்த தீர்மானித்துள்ளது.
Discussion about this post